புவனகிரி : புவனகிரி சப் இன்ஸ்பெக்டராக நாகராஜ் பொறுப்பேற்றார்.
விருத்தாசலம், ஆவினன்குடி போலீஸ் நிலையத்தில் சப்--இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் நாகராஜ். இவர் புவனகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், புவனகிரி காவல் நிலையத்தில் நேற்று சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.