திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள ராமதாஸ் கல்வி அறக்கட்டளை, சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, சட்டக்கல்லுாரி சார்பில் பொங்கல் விழா நடந்தது.
விழாவையொட்டி, கல்லுாரி மாணவ, மாணவிகள் வைத்திருந்த பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டு பாராட்டினார்.
தொடர்ந்து கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவையொட்டி கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பா.ம.க.,நிறுவனர் பரிசு வழங்கினார்.
விழாவில், பா.ம.க., கவுரவ தலைவர் மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மேல்மருவத்துார் ஆதிபாராசக்தி ஆன்மிக இளைஞரணி தலைவர் செந்தில்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, வழக்கறிஞர் பாலு, மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், தொழிலதிபர் சுப்ராயலு, விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், தேர்தல் பணிக்குழு தலைவர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.