கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, கம்மார்பாளையம் கிராமத்தில் வசித்தவர் மாசி, 62. ஓய்வு பெற்ற மின் ஊழியர். இவரது மனைவி பூங்கொடி, 55. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆனவர்கள்.
இரு தினங்களுக்கு முன், கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு, மாசியும் அவரது மனைவி பூங்கொடியும் சென்றனர். வயலுக்கு தெளிக்கும் பூச்சிச் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும், நேற்று முன்தினம் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.