வடலுார் : குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய 25க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ரெட்டியார் காலனி, கே.கே., நகர், லலிதா நகர், அம்பேத்கர் நகர் உட்பட பல பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பேரூராட்சிக்கு பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பேரூராட்சி செயலர் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றித்திரிந்த 25க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து, அப்புறப்படுத்தினர்.