விழுப்புரம் : விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமையில் நடந்த கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து பல்வேறு புகார்கள், கோரிக்கைகள் குறித்து, 38 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, எஸ்.பி., உறுதி அளித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தார்.