மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் முருகன் வரவேற்றார்.
மாநில செயலாளர் வினோஜ் செல்வம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த கோலம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பேசினார்.
பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பொது மக்களுக்கு பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஒ.பி.சி., அணி துணைத் தலைவர் ரவீந்திரன், கவுன்சிலர் தங்கமணி, செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகம், அய்யப்பன் ரவி, ஒன்றிய செயலாளர் தேவப்பெருமாள், ஒன்றிய துணைத் தலைவர் குப்பு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கம்மாபுரம் வடக்கு ஒன்றிய தலைவர் சின்னதுரை நன்றி கூறினார்.