கடலுார் : கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலககத்தில் போக்குவரத்துத் துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் விஜயகுருசாமி தலைமை தாங்கினார். சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் பேசினார். அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், பொதுச் செயலாளர் பிச்சைமுத்து, டாஸ்மாக் பணியாளர் சங்க சரவணன், அமைப்பு செயலாளர் சிவக்குமார், சுகமதி, ஜெயச்சந்திரராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். போக்குவரத்து அலுவலக பணியாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.
பரபரப்பு
ஆர்ப்பாட்டம் நடந்தபோது, அங்கு வந்த வெளி நபர் ஒருவர், போதையில் இடையூறாக பேசியதால் பரபரப்பு நிலவியது.