கிடப்பில் பிரளயகாலேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி! ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கி ஏழு மாதங்கள் ஆகிறது

Added : ஜன 12, 2023 | |
Advertisement
பெண்ணாடம் ; பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் கோபுரங்கள் புனரமைக்க ஏழு மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டியும், இதுவரை பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா,
கிடப்பில் பிரளயகாலேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி! ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கி ஏழு மாதங்கள் ஆகிறது

பெண்ணாடம் ; பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் கோபுரங்கள் புனரமைக்க ஏழு மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டியும், இதுவரை பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா, ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாதங்களில் கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

ஐப்பசியில் பவுர்ணமி அன்னாபிஷேகம், அப்பருக்கு அம்பாள் காட்சியளித்து ரிஷப முத்திரை, சூல முத்திரை வழங்கிய ஐதீக நிகழ்ச்சி, ஆவணியில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடக்கும்.

பிரளயகாலேஸ்வரருக்கு 'கைவழங்கீசன்' என்ற பெயரும் உள்ளதால் கோவிலுக்கு கை, கால் உபாதையோடு வரும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கோவில் கடந்த 2006ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. கடந்த 2018 ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தது. கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த பாலாலய பூஜை செய்ய கோவில் நிர்வாகம் சார்பில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு விண்ணப்பித்தனர்.

தொல்லியல் துறையினரும் கோவிலில் உள்ள மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சன்னதி மற்றும் சுற்று பிரகாரத்தில் உள்ள தொல்லியல் துறை சார்ந்த கற்சிலைகள், கல்வெட்டுகள், கல் துாண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிேஷகத்திற்கு பாலாலயம் பூஜை நடத்தவில்லை. இதனால் கோபுரத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து வருவதால் சிலைகள், சுவர்கள் சேதமடைந்து கோபுரங்கள் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, பக்தர்களின் கோரிக்கையையேற்று, பிரளயகாலேஸ்வரர் கோவிலை புனரமைக்க கோவில் நிதி 39 லட்சத்து 53 ஆயிரம் மற்றும் உபயதாரர் நிதி 43 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புனரமைப்பு பணிக்கு பாலாலய பூஜை கடந்தாண்டு மே மாதம் 27ம் தேதி நடந்தது.

பாலாலய பூஜையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தருமபுர ஆதீனம் திருபுவனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சேர்ந்து அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தனர்.

இதற்காக ஜூலை மாதம் கோபுரங்களை புனரமைப்பதற்கு சாரம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை புனரமைப்பு பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவிலில் உள்ள சிலைகள், துாண்கள் பாழாவதுடன், கோபுரங்களில் செடி, கொடிகள், மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ந்து கோபுரம் மற்றும் சிலைகள் பாழாகி வருவதால், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே, பிரளயகாலேஸ்வரர் கோவில் கோபுரங்கள் புனரமைப்பு பணிகளை விரைந்து துவக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X