கடலுார்: கடலுாரில் அ.ம.மு.க., சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில், விலங்கல்பட்டு, வன்னியர்புரத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். கடலுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி பங்கேற்று, 200 பேருக்கு பானை, அரிசி, வெள்ளம், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கினார். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மத்திய மாவட்ட செயலாளர் பக்தரட்சகன், மேற்கு மாவட்ட செயலாளர் மோகன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாமணி பங்கேற்றனர்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.