விழுப்புரம் : வாட்டர் பிளாண்ட்டில் பங்குதாரராக சேர்க்கக்கோரி, பெண்ணைத் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ரேவதி, 45; இவர், கீழ்முத்தாம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், 52; என்பவரிடம் 20 சென்ட் நிலத்தை 29 ஆண்டுகள் குத்தகைக்கு 10 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், ரேவதி பணம் கொடுக்கவில்லை எனவும், ரிஜிஸ்டர் மட்டும் செய்ததாக விக்கிரவாண்டி கோர்ட்டில் நாகராஜ், வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி ரேவதி வாட்டர் பிளாண்ட் போட அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். அப்போது, தன்னையும் வாட்டர் பிளாண்ட்டில் ஒரு பங்குதாரராக சேர்க்குமாறு, ரேவதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகாரின்பேரில், நாகராஜ் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.