திண்டிவனம் : திண்டிவனத்தில் கறிக்கடை முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடி நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம், கசாமியன் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர் மகன் முபாரக், 22; இவர் விவேகானந்தா தெருவில் கறிக்கடை வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன், தனது பைக்கை கடை முன் நிறுத்தி விட்டு வியாபாரத்தை கவனித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது, பைக்கை காணவில்லை.
முபாரக் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், பிரம்மதேசம் அடுத்த ஆடவல்லிகூத்தான், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சரண்ராஜ் என்கிற ராஜ், 25; என்பவர் பைக்கை திருடியிருப்பது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.