திண்டிவனம் : திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
அதனையொட்டி, திண்டிவனம் அடுத்த மொளசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, திண்டிவனம் மோட்டார் வாகன அலுவலர் முக்கண்ணன் தலைமை தாங்கினார். நிகிழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், முருகவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் (செயலாக்கம்) விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், வாகனங்களின் பின்பகுதியில் பிரதிபலிப்பான் ஒட்டப்பட்டது. மேலும், விபத்தைத் தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.