கடலுார் :
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அரிஸ்டோ பள்ளி வளாகத்தில், நம்ம கடலுார் சார்பில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரிய உடை, பாரம்பரிய உணவு மற்றும் பொங்கல் விழா பற்றிய ஓவியம், ரங்கோலி ஆகியவற்றில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் நம்ம கடலுார் குழு வெங்கடேசன், நெல்சன்ராஜ் குமார், ஓம்பிரகாஷ், வெங்கட்ராஜ், சுதர்சனா, கருணாநிதி, டாக்டர் இளந்திரையன், கிருஷ்ணசாமி கல்வி குழும டாக்டர் கண்ணன் ஆகியோர் மாணவர்களின் கலைத்திறனை பாராட்டினர்.
பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், பள்ளி சேர்மன் சிவகுமார், லட்சுமி சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.