விழுப்புரம் : அ.தி.மு.க., கவுன்சிலர் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் வழங்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் நகராட்சி 26வது வார்டு வ.பாளையம் ரேஷன் கடையில் நேற்று தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெயப்பிரியா சக்திவேல், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு வந்தார்.
அப்போது, அங்கு வந்த தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சண்முகம், நாங்கள் தான் பொங்கல் தொகுப்பு வழங்குவோம் என ஜெயப்பிரியா சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டார்.
அதற்கு, வார்டு கவுன்சிலர் என்பதால் நான் தான் பொங்கல் தொகுப்பு வழங்குவேன் என ஜெயப்பிரியா சக்திவேல் கூறினார். இதனால், அ.தி.மு.க.,வினர் மற்றும் தி.மு.க.,வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கவுன்சிலர் ஜெயப்பிரியா சக்திவேல், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இதன் பின், முன்னாள் கவுன்சிலர் சண்முகம், நானும் வழங்குவேன் என பொங்கல் தொகுப்பை பயனாளிகளிடம் வழங்கினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.