கடலுார் : பொங்கல் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, கடலுார் மாவட்டத்தில் இரு நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையொட்டி, திருவள்ளுவர் தினமான 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதே போன்று, வரும் 26ம் தேதி குடியரசு தினம் வருகிறது. அதையொட்டி, இரு நாட்களும் கடலுார் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், மதுபான பார்கள் மூட வேண்டும். மீறி டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றால், கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.