விழுப்புரம், : விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகையொட்டி போலீசார், கூட்டத்தைக் கண்காணிக்கும் பணியை எஸ்.பி., ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்கவும், கண்காணிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அதிக நெரிசல் ஏற்படும் பழைய பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, வீரவாழி மாரியம்மன் கோவில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, நகர போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இப்பணியை எஸ்.பி., ஸ்ரீநாதா நேற்று முன்தினம் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கண்காணிப்பு கோபுரங்களில் இருந்த காவலர்கள், ஒலிப்பெருக்கி உதவியுடன், பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்தும் மற்றும் வாகனங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
இதனை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி., போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது டி.எஸ்.பி., பார்த்திபன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த்குமார் உடனிருந்தனர்.