காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் மாடவீதியில், சங்கரா பெண்கள் செவிலியர் கல்லுாரி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
இக்கல்லுாரி முதலாம் ஆண்டு நிறைவு விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செட்டிநாடு மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி 'டீன்' லட்சுமி பங்கேற்று பேசினார். மாணவர்களின் ஆற்றல், செவிலியர்கள் சேவையின் சிறப்பு குறித்து அவர் பேசினார்.
பின், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், சங்கரா பெண்கள் செவிலியர் கல்லுாரி முதலாம் ஆண்டு விழா மலரை, கல்லுாரி நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
அதை சங்கரா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மாலதி பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் செவிலியர் கல்லுாரி நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், கல்லுாரி முதல்வர் ராதிகா, மற்றும் மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.