மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆனைமடு பகுதியில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த பெண்ணிடம் சோதனை செய்ததில், அவர் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மனைவி நந்தினி, 27; எனவும், 10 லிட்டர் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.