கரும்பு கத்தை துாக்க கூலி உயர்த்த பெண் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

Added : ஜன 12, 2023 | |
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில், ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயிகள் ஆண்டுதோறும் கரும்பு பயிரிகின்றனர். கடந்த ஆண்டு சாகுபடி செய்த கரும்புகளை, ஒரு மாதமாக அறுவடை செய்து வருகின்றனர். தோட்டத்தில் கரும்புகளை வெட்டும் ஆண் தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் கூலியாக 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை நில உரிமையாளர்கள் வழங்குகின்றனர். ஆனால்,
 கரும்பு கத்தை துாக்க கூலி உயர்த்த பெண் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல கிராமங்களில், ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயிகள் ஆண்டுதோறும் கரும்பு பயிரிகின்றனர். கடந்த ஆண்டு சாகுபடி செய்த கரும்புகளை, ஒரு மாதமாக அறுவடை செய்து வருகின்றனர்.

தோட்டத்தில் கரும்புகளை வெட்டும் ஆண் தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் கூலியாக 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை நில உரிமையாளர்கள் வழங்குகின்றனர்.

ஆனால், கரும்புக் கத்தை துாக்கும் பெண் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக 250 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, மிளகர் மேனியில் கரும்புக் கத்தை துாக்கும் பெண் தொழிலாளர்கள் கூறியதாவது:

தோட்டத்தில் அறுவடை செய்யும் கரும்புகளை, ஆலைக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்ற வசதியாக குறிப்பிட்ட ஒரு இடம் தேர்வு செய்யப்படும்.

அந்த இடத்திற்கு கரும்புகளை தலைமேல் சுமந்து வந்து சேர்க்கும் பணியில், பெண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு, நாள் முழுக்க கரும்பு கத்தைகளை தலைமேல் சுமக்கும் எங்களுக்கு, 250 ரூபாய் மட்டுமே ஒரு நாள் கூலியாக கிடைக்கிறது.

கரும்பு அறுவடை பணியில் ஆண்டுக்காண்டு, ஆண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படுவதை போல, கரும்புக் கத்தைகள் சுமை துாக்கும் பெண் தொழிலாளர்களுக்கும், கூலி உயர்த்தி வழங்க முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X