மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் பகரூன்னிஷா ஆசிம் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., விஜய் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாதுகாப்பு அலுவலர் கவுரி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்புக்கான அவசர எண் குறித்தும் விளக்கினார். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இக்கூட்டம் கட்டாயமாக நடத்த வேண்டும் என கூறினார்.