கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி குனில்வயல் பகுதியில், சுவாமி விவேகானந்தரின், 160வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
முதுமலை ஊராட்சி கவுன்சிலர் நாராயணன் வரவேற்றார். விழாவுக்கு, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை வகித்து, விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து. பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர் சிவக்குமார், ராஷ்ட்சிய சுயம் சேவா சங்க உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.