சங்கராபுரம் : சங்கராபரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சங்கராபுரம் வட்டார தொழில் சார் வல்லுநர்களுக்கு வட்டார சேவை மைய கூட்டரங்கில் 5 நாள் பயிற்சி நடந்தது.
செயல் அலுவலர் பழனிசாமி, நிறுவன மேம்பாட்டு தொழில்நுட்ப ஆலோசகர் விஸ்வநாதன் ஆகியோர் தனி நபர் தொழில் பற்றி பயிற்சி அளித்தனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்ட அணி தலைவர் ஏழுமலை, திட்ட செயலா ளர்கள் செந்தில் நாதன், யாழினி பங்கேற்றனர்.
பயிற்சியில் 50 பேர் பங்கேற்றனர்.