சென்னை:பொங்கல் பண்டிகையொட்டி, சென்னையில் 'மெட்ரோ ரயில்' இரவு 10:00 மணி வரை கூடுதல் சேவைகளை இயக்க உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையொட்டி, இன்றும், நாளையும் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இரவு 10:00 மணி வரை நீட்டித்து இயக்கப்படும்.
அதுபோல், அனைத்து முனையங்களில் இருந்து செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை, இரவு 11:00 மணிக்கு பதிலாக 12:00 மணி வரையில் இயக்கப்படும்.
ஜன., 18ல் அனைத்து முனையங்களில் இருந்து புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5:00 மணிக்கு பதிலாக காலை 4:00 மணி முதல் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.