திருவல்லிக்கேணி, சென்னை, திருவல்லிக்கேணி, வினாயகபுரம் தெருவை சேர்ந்தவர் அனந்தலட்சுமி, 45. இவர், துவைத்த துணிகளை வீட்டின் இரண்டாவது மாடியில் காயவைத்தார்.
நேற்று முன் தினம் இரவில், துணிகளை எடுக்க மாடிக்கு சென்றார். மின் விளக்கு இல்லாதத நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து அனந்த லட்சுமி படுகாயம்அடைந்தார்.
ஆபத்தான நிலையில், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.