செஞ்சி : செஞ்சி, சிங்கவரம் சாலை சிறுகடம்பூர் மாரியம்மன் கோவிலில் செஞ்சி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடந்தது.
ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அருளரசி, ஒன்றிய பொதுச் செயலாளர் அமலநாதன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பொங்கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானமும், பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தி பரிசும் வழங்கப்பட்டது.
மாவட்ட ஊடகப்பிரிவு துணைத் தலைவர் சரவணன், திட்ட பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஒன்றிய பொதுச்செயலாளர் சரவணன், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஞானமணி, ஐ.டி., பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீரங்கன், மாவட்ட தலைவர் சத்தியசீலன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மயிலம் தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.