சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே நவீன முறையில் வெங்காயம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு, பூட்டை, பாவளம், கொசப்பாடி, மல்லாபுரம் கிராமங்களில் சாம்பார் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் கோழிக்கால் நோய் கட்டுப் படுத்தும் முறை மற்றும் நவீன முறையில் சாம்பார் வெங்காய சாகுபடி பரப்பை அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பூட்டை கிராமத்தில் நடந்தது.
தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த பயிற்சிக்கு, உதவி இயக்குனர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி அலுவலர்கள் தேவநாதன், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
காலசமுத்திரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி டாக்டர் சர்மிளா தேவி முகாமில் பங்கேற்று, நவீன முறையில் வெங்காய சாகுபடி குறித்து பேசினார்.
பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.