ராஜமங்கலம், கள்ளச் சந்தையில் மதுபானம் விற்ற மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 320 'குவார்ட்டர் பாட்டில்'களை பறிமுதல் செய்தனர்.
சென்னை ராஜமங்கலம், ரெட்ஹில்ஸ் சாலையிலுள்ள டாஸ்மாக் கடை அருகே, நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் போலீசார், நேற்று அதிகாலை அங்கு கண்காணித்தனர். அப்போது, பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுபானம் பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது.
அவற்றை விற்பனை செய்த முகப்பேரைச் சேர்ந்த வினோத்குமார், 36; மதுரையைச் சேர்ந்த பரீத்கான், 28; புதுக்கோட்டையை சேர்ந்த ரகுமான், 22; ஆகியோர் சிக்கினர்.
அவர்களை கைது செய்த போலீசார், 320 'குவார்ட்டர் பாட்டில்'களை பறிமுதல் செய்தனர்.