புளியந்தோப்பு, ரகளையில் ஈடுபட்டு மூவரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு, மோதிலால் தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி மணவாளன், 48; அவரது மகன் வினோத்குமார், 20.
இருவரும், 6ம் தேதி இரவு, குருசாமி நகர் சந்திப்பில், கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், 50, என்பவரிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் வெட்டினர்.
தொடர்ந்து, சந்தோஷ்குமார், 35, மற்றும் கஸ்துாரி, 43, ஆகியோரையும், அவர்கள் வெட்டி, ரகளையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பேசின்பாலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்ற போது, இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மறுநாள், வினோத்குமாரை கைது செய்த போலீசார், ஒரு கத்தியை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளி மணவாளனை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.