சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் கட்டட தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு பொங்கல் பணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சார்லி வின்சென்ட், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேந்திரன், ஜெயபால், சிவச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 60 கட்டட தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்டிட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement