கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி டி.எஸ்.எம்., ஜெயின் கல்விக்குழுமத்தில் தேசிய இளைஞர் திருவிழா கொண்டாட்டப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் தொழில்நுட்பக் கல்லுாரியில் விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
டி.எஸ்.எம்., கல்விக்குழும செயலாளர் அசோக்குமார் துவக்கி வைத்து விவேகானந்தரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.கல்லுாரி கட்டட துறை உதவி பேராசிரியர் ஆல்பர்ட் பிரகாஷ், இயந்திரவியல் பேராசிரியர் சுரேஷ்குமார் பேசினர்.
கல்லுாரி துறை தலைவர்கள் ரகுகுமார், சுரேஷ், சந்தோஷ் குமார், முகுந்தன், வெங்கடேசன், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி முதலவர் ஈஸ்வரன் தங்கராசு நன்றி கூறினார்.
அதேபோல் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் லதா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ராமு, வெங்கடேசன், செல்வம், பிரபாகரன், தேவி, அர்ச்சனா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.