செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகளுக்கு, 579 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு, 2022- - 23ல், 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கரூரில், கடந்த நவ., 11 ல் துவக்கிவைத்தார்.
செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில், செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார், திருமழிசை ஆகிய கோட்டங்கள் உள்ளன.
மின்பகிர்மான வட்டத்தில், 2013 மார்ச் 31 வரை, இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்தோரில், முன்னுரிமை அடிப்படையில், 579 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில், செங்கல்பட்டு கோட்டத்தில் 150, அச்சிறுப்பாக்கம் கோட்டத்தில் 205, மதுராந்தகம் கோட்டத்தில் 190, மறைமலைநகர் கோட்டத்தில் 34 பேர் என, 579, விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.