செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம், குடியரசு தினவிழா நாளில், 'டாஸ்மாக்' கடைகளுக்கு, விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் 16ம் தேதி, குடியரசு தின விழா 26ம் தேதி, ஆகிய தினங்களை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், விடுமுறை அளிக்கப்படுகிறது.
அன்றைய தினங்களில், கடைகள் மற்றும் 'குடி'மையங்கள் செயல்பட்டால், உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.