பல்லாவரம், குரோம்பேட்டை, ஜாய் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், போதை மாத்திரை விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பல்லாவரம் போலீசார், நேற்று முன்தினம், குறிப்பிட்ட அந்த முகவரிக்கு சென்று சோதனை நடத்தினர். அதில், 590 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
குரோம்பேட்டையில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் அச்சிறுவன், போதை மாத்திரைகளை, சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், சிறுவனை கைது செய்தனர்.