உளுந்துார்பேட்டை : வானுார் அடுத்த வி. புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 55; இவர் உளுந்துார் பேட்டை போலீஸ் குடியிருப்பில் தங்கி திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை 7:00 மணியளவில் போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ஆசைதம்பிக்கு பூஞ்சோலை, 50 என்ற மனைவியும், தமிழ்மணி, ரகுநாத் என்ற மகன்கள் மற்றும் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.