சென்னை இந்திய தர நிர்ணய அமைவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அதிகாரிகள் குழு, ஓ.எம்.ஆர்., ராஜிவ்காந்தி சாலையில் அமைந்துள்ள 'ரிட்ஸ் லிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தில், நேற்று முன்தினம் அமலாக்கச் சோதனை நடத்தியது. இதில், ஐ.எஸ்.ஐ., மார்க் இல்லாத 817 பொம்மைகள், 337 எலக்ட்ரிக் பொம்மைகள், எலக்ட்ரிக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், பொதுமக்கள், பி.ஐ.எஸ்., தெற்கு மண்டல அலுவலகம், சி.ஐ.டி., வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை - 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது பி.ஐ.எஸ்., கேர் செயலி அல்லது cnbo1@bis.gov.in என்ற இ - மெயில் வாயிலாக புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.