பந்தலுார்:பந்தலுார் பகுதியில் காலை நேரத்தில் நீர் பனியுடன், குளிரான காலநிலை நிலவி வருகிறது.
பந்தலுார் பகுதியில் மித வெப்ப காலநிலை நிலவி வருவது வழக்கம்.
கடந்த ஆண்டு முதல் சுற்றுவட்டார பகுதிகளில், டிச., ஜன., மாதங்களில் நீர் பனி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக இங்குள்ள விளையாட்டு மைதானம் மற்றும் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகளில் காணப்படும் நீர் பனியால் அதிகாலையில் கடும் குளிர் நிலவி வருகிறது.
தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.