செவிலியர் பணியிடங்கள்: விண்ணப்பம் வரவேற்பு| Nursing Vacancies: Applications are welcome | Dinamalar

செவிலியர் பணியிடங்கள்: விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜன 13, 2023 | |
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ககப்படுகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் 54 செவிலியர்கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ககப்படுகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் 54 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலம் ஒப்பளிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் மாதம் 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவங்களை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 25ம் தேதி மாலை 5:45 மணிக்குள் உறுப்பினர் செயலாளர், துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி 606 213 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X