திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் பல்வேறு முக்கிய சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கப்பட்டன.
இதன் காரணமாக, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு சாலையின் பல இடங்களில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.
சாலை முழுதும் துாசி மண்டலமாக மாறியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பாதாள சாக்கடை பணிகளை முடித்த சாலைகளில், புதிய சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் பேரூராட்சித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய தெற்கு மாட வீதியில், பாதாள சாக்கடை பணி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.