புதுச்சேரி : காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுவாமி விவேகானந்தர் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
தமிழ் துறை தலைவர் கொழந்தசாமி தலைமை தாங்கினார். மாணவி சந்தியா வரவேற்றார். தாகூர் அரசு கல்லுாரி பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார், 'விவேகானந்தரின் சிந்தனை' என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு விவேகானந்தர் சிந்தனை குறித்து வினாடி வினா போட்டி நடந்தது.
அதில் வெற்றி பெற்ற 15 பேருக்கு, விவேகானந்தர் சிந்தனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் சிகாதா, வேல் கார்த்திகேயன், இளங்கோவன், பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாணவி சுனிதா நன்றி கூறினார்.