செங்கல்பட்டு:செய்யூர் அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத், 32. இவர், டிச., 24ல் சாராயம் விற்ற போது, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர் மீது மூன்றுக்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு, எஸ்.பி., பிரதீப் பரிந்துரை செய்தார்.
இதனையேற்று சம்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் ராகுல்நாத், நேற்று உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement