அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாபுராயன் பேட்டை ஊராட்சியில், தமிழக அரசு சார்பாக, இலவச தென்னங்கன்று வழங்கும் நிகழச்சி நடந்தது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம், 600 கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் நவநீதம், அச்சிறுபாக்கம் வேளாண் உதவி இயக்குநர் பொறுப்பு அருள் பிரகாசம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Advertisement