தேனாம்பேட்டை, தி.நகர், ஹிந்தி பிரசார சபா தெருவில், மழை உள்ளிட்ட காரணங்களால் சாலை படுமோசமாகி உள்ளது.
இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும், 'பஞ்சர்' ஆகி விடுகிறது. மேடுபள்ளமாக இருப்பதால், வாகனங்கள் குலுங்கிக்குலுங்கி செல்வதால், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
நந்தனம் அருகே 'மெட்ரோ ரயில்' பணி நடக்கிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக இப்பாதையில் தான் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
ஆரம்பத்தில் இந்த சாலை நன்றாகதான் இருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால் சாலை கொத்தப்பட்டு, படுமோசமாகிவிட்டது. கார் போன்ற வாகனங்கள் கூட சமாளித்து சென்று விடுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை.
கற்கள் அதிகம் உள்ளதால், டயர் பஞ்சராகி பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.