சிதிலமடைந்த கொளத்துார் சாலை
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் கிராமம் செல்லும் சாலை 2 கி. மீ., துாரம் உள்ளது. இந்த சாலை, பள்ளங்கள் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது.
கடந்த மாதம், ஜல்லி கற்கள் கொண்டு பள்ளங்கள் மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. பணிகள் முழுமையாக நடைபெறாததால், ஜல்லி கற்கள் பெயர்ந்து, இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிலை உள்ளது.
கற்கள் குத்தி வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன. எனவே இந்த பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
- அப்பகுதி மக்கள், கொளத்துார்.