கொடுங்கையூர், கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரில், பெருமாள் தெரு, விவேகானந்தா தெரு, அம்பேத்கர் தெரு, சர்வ பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில், லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இங்கு பெரும்பாலான இடங்களில், புதை மின் வடங்கள் பதிக்கப்பட்டு, மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, ஆங்காங்கே சாலையோரங்களில் மின் இணைப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மின் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படாததால், பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கிறது.
இதில், ஒயர்கள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. சில இடங்களில் இந்த மின் பெட்டிகள் பூமியில் புதைந்தும், சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன. பல இடங்களில் சணல் கயிறுகள் கொண்டு மின் பெட்டிகள் தற்காலிகமாக மூடி உள்ளனர்.
இவ்வாறு பராமரிப்பில்லாமல் இருக்கும் 20க்கும் மேற்பட்ட மின் பெட்டிகளால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.