சின்னசேலம் : சின்னசேலம் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சின்னசேலம் ரோட்டரி சங்கம், இதயா மகளிர் கல்லுாரியின் இன்ராக்கிளிப், சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ஜெகன் நடராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவ மாணவி கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாக சென்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், ரவிசங்கர், ஸ்ரீபிரியா, செல்வம், வேல்முருகன், ஜெயபாஸ் கரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனிதா, ஆரோக்கியமேரி, சுதா, பானுப்பிரியா உட்பட பலர் பங் கேற்றனர்.