மணலி,
மணலியில், 15 ஆயிரம் பேருக்கு பச்சரிசி, பாசிபருப்பு, முந்திரி, திராட்சை, நெய், ஜோடி கரும்பு, நாட்காட்டி உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை மண்டலக் குழு தலைவர் வழங்கினார்.
மணலி மண்டலக் குழு தலைவராக ஆறுமுகம் உள்ளார். ஆண்டுதோறும், பொங்கலை முன்னிட்டு, 20 வது வார்டைச் சேர்ந்த, 5,000 குடும்பத்தினருக்கு, பொங்கல் பரிசு, ஜோடி கரும்பு உள்ளிட்டவற்றை, 11 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
இம்முறை மண்டலக் குழு தலைவரான நிலையில், 12 வது ஆண்டாக, மண்டலம் முழுதும், 15 ஆயிரம் பேருக்கு, பச்சரிசி, பாசிபருப்பு, முந்திரி, திராட்சை, நெய், ஜோடி கரும்பு, நாட்காட்டி உள்ளிட்டவற்றை, நேற்று காலை முதல் வழங்கினார்.
துவக்க நிகழ்ச்சியில், சென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் சுதர்சனம், பகுதி செயலர்கள் தனியரசு, அருள்தாசன் உள்ளிட்டோர் பங்கேற்று, பொங்கல் பரிசு, ஜோடி கரும்பினை வழங்கினர்.