புதுச்சேரி : வைக்கோல் அனுப்புவதாக கூறி பால்வியாபாரியை மோசடி செய்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோரிமேடு, டி.எம்.நகரை சேர்ந்தவர் சுரேஷ்,57; பால் வியாபாரி. இவர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏவலுார் கிராமத்தில் மாட்டு பண்ணை வைத்துள்ளார். இவர், தனது மாடுகளுக்கு வைக்கோல் போர் வாங்க ஆன்லைனில் வியாபாரிகளை தேடியுள்ளார்.
அப்போது, சுரேைஷ போனில் தொடர்பு கொண்ட திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர், தனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினால், வைக்கோலை வண்டியில் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.
அதனை நம்பி சுரேஷ், கடந்த நவம்பர் 27 ம் தேதி ரூ.7,500 வங்கி கணக்கில் அனுப்பினார். ஒரு மாதத்திற்கு மேலாகியும் வைக்கோல் வராததால் இதுகுறித்து சுரேஷ் நேற்று முன்தினம் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.