புதுச்சேரி : புதுச்சேரி தமிழ் இலக்கிய ஆய்வுக் கழகம் சார்பில் திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழா தமிழ் சங்க வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு, குழந்தைவேலனார் தலைமை தாங்கினார். அரிமா பாலகிருஷ்ணன், பாவலர் விசயரங்கம், வேலாயுதம் முன்னிலை வகித்தனர். ஆய்வுக்கழகத்தின் பொதுச் செயலர் முருகையன்வரவேற்றார். பொருளாளர் அசோகன் நோக்க உரையாற்றினார்.
திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் விழாவை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஆய்வுக் கழகத்தின் செயலர் நெய்தல் நாடன்,துணைத் தலைவர் கோவிந்தராசு, வ.உ.சி. பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் சீனிவாசன், நடராசன் வாழ்த்தி பேசினர்.
'பொங்கலின் மங்கலப் பொருட்கள் பேசுகின்றன' என்ற தலைப்பில் இலக்கிய மன்றத் தலைவர் பூங்கொடி பராங்குசம் தலைமையில்சிறப்புக் கவியரங்கம் நடந்தது. அதில்,பாவலர்கள் விசயராணி, பாலசுப்ரமணியன், ஜெயந்தி ராஜவேலு, வளர்மதி முருகன், வசந்தகுமார் கவிதை வாசித்தனர்.
முனைவர் ஆனந்தன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை புதுச்சேரி தமிழிலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தலைவர் வேணுகோபால், செயற்குழு உறுப்பினர்கள் முத்தையாசாமி, மணி,மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.