அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டடம் தேவை
திருப்போரூர் பேரூராட்சி, சான்றோர் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 15 குழந்தைகள் ஆரம்பக் கல்வி பயில்கின்றனர். சொந்த கட்டடம் இன்றி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. வாடகை கட்டடம் என்பதால் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
கழிப்பறை உள்ளிட்ட வசதி இல்லாததால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மேற்கண்ட அங்கன்வாடி மையத்திற்கென, அனைத்து வசதிகளுடன் தனிக் கட்டடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- செல்வம், திருப்போரூர்.