அச்சிறுப்பாக்கம்:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 30. கட்டட தொழிலாளி. நேற்று இவர், திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி, 'ஹோண்டா சைன்' இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருந்தார்.
அச்சிறுபாக்கம் அருகே, சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற 'டேங்கர் லாரி'யின் பின்பக்கத்தில் 'பைக்' மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
அச்சிறுபாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.